|
காளான் விதை மூலம் வளர்ச்சி செய்யும் முறை
செய்முறை
- நன்கு வளர்ந்த, நோயற்ற அதிகாலையில் மலர்ந்த சிப்பிக் காளானை தேர்ந்தெடுக்கவும். இதை ஒரு தூய தாளில் 2 – 3 மணி நேரத்திற்கு வைத்து, அதிலுள்ள ஈரத்தைப் போக்கவும்
- வளர்ச்சி ஊடக அறை / அடுக்குப் பாய்வு அறையை தொற்று நீக்கு கரைசலைக் கொண்டு சுத்தப்படுத்தவும்
- கிருமி நீக்கம் செய்த உருளைக்கிழங்கு டெக்ஸ்ரோஸ் ஸ்லேண்டஸ் ப்ளேடுகள், 8 இடுக்கிகள் மற்றும் பலவற்றை அடுக்குப்பாய்வு அறையில் வைத்து புறஊதாக்கதிர்களை செலுத்தலும்
- 20 நிமிடங்கள் கழித்து, புற ஊதாக் கதிர்களை நிறுத்தி, பின் 5 நிமிடங்கள் கழித்து திரும்ப தொடங்கவும்
- புன்சன் பர்னர் கொண்டு அனைத்து உபகரணங்களையும் கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
- காளானை ஈத்தைல் ஆல்காலை பயன்படுத்தி மேற்பரப்பு கிருமி நீக்கம செய்ய வேண்டும். பின் காளானை நீளவாக்கில் இரண்டு பகுதிகளாக வெட்ட வேண்டும்
- புதிய, கிருமி நீக்கம் செய்த ப்ளேடு கொண்டு காளானின் மையப் பகுதியிலிருந்து வெட்டி சிறிய துண்டாக எடுக்க வேண்டும்
- அகார் கரைசலில் உள்ள குழாயின் பஞ்சை அகற்றி, காளானின் திசுவை கிருமிநீக்கம் செய்த இடுக்கியைப் பயன்படுத்தி இதில் வைத்து உடனடியாக மூடவேண்டும்
- காளானிலிருந்து திசுக்களை மாற்றிய பின்னர், இந்தக் குழாய்கள் ஒரு கூடையில் அடுக்கப்பட்டு, சுத்தமான அறையில் அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்
- குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதித்து, கலப்படமுள்ளவற்றை அகற்ற வேண்டும். அடுத்த 10 நாட்களுக்குள் இந்தக் குழாய்கள் தயார் நிலைக்கு வந்து விடும். பின் இந்த வளர்ச்சி ஊடகத்தைப் பயன்படுத்தி தாய்க் காளான் வித்துக்களை உற்பத்தி செய்யலாம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- அறைக்குள் நுழையும் முன் கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவிவிட்டு செல்ல வேண்டும். முடிந்தால், கையுறைகளையும் பயன்படுத்தலாம்
- அறையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகபட்சமாக 2 ஆட்கள் வேலை செய்யலாம். அறையின் உள்ளே தேவையற்ற பேச்சுக்கள் பேசக் கூடாது
|
|